பொதுத் தேர்தலுக்குப் பின் பாராளுமன்றத்தை அரசியலமைப்புச் சபையாக செயற்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என்று நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதனை, பொதுத் தேர்தலுக்கான விஞ்ஞாபனத்திலும் அரசாங்கம் முன்வைக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தகவல் திணைக்களத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே விஜயதாச ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அரசியல் கட்சிகள் தத்தமது நிகழ்ச்சி நிரல்களை ஒருபுறம் வைத்துவிட்டு நாட்டினதும் மக்களினதும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் செயற்படுவது அவசியம். இரண்டு மூன்று வருடங்களுக்காவது ஒன்றிணைந்து செயற்படுவது முக்கியம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்கா, இந்தியா அல்லது வேறு நாடுகளின் அரசியலமைப்பு போலன்றி எமது நாட்டுக்குப் பொருத்த மான அரசியலமைப்பொன்றை நாம் தயாரிப்போம். நல்லதைச் செய்தால் மக்களிடமிருந்து நல்ல முடிவை எதிர்பார்க்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments