Ticker

6/recent/ticker-posts

விகிதாசார, தொகுதி முறைத் தேர்தல்களில் முஸ்லிம் பிரதிநிதித்துவம்


ஒலுவில்: எம்.எல். பைசால்  -காஷ்பி-

19 வது அரசியல் சீர் திருத்த பிரேரணை பாராளுமன்றத்‌தில் சமர்பிக்கப்பட்டு அதற்கான விவாதம்   எதிர்வரும்  9.10 ம் திகதிகளில்   இடம்பெற உள்ளது.
இத்திருத்தச் சட்ட மூலத்தில்  பிரதானமாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பது ,புதிய தேர்தல் முறையினை அறிமுகப்படுத்துவது ,மற்றும் 17 வது திருத்தத்தினை மீள் கொண்டு வருவதுடன் 18 வது திருத்தத்தினை இரத்துச் செய்தல் போன்ற விடயங்கள்  முக்கியமாக   இடம்பெற்றுள்ளன.


இப்பிரேரணையில் பாராளுமன்ற தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வருவது பற்றிய விடயமே  பலரது கவனத்தினையும்  ஈர்த்துள்ளது.குறிப்பாக சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவம் பாராளுமன்றத்‌தில்உறுதிப்படுத்துவதில் உள்ள பிரச்சினையே இங்குள்ள முக்கிய கேள்வியாகும்..

இப்பிரேரணை சட்டமாக்கப்படும் பட்சத்தில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் எவ்வாறு அமையப் போகின்றது  என்பது  பற்றியும்  அதனால்  ஏற்படும் சாதக, பாதக விளைவுகளைப் பற்றியும் தெளிவு  பெறுவது  முக்கியமானது.  
1989 ம் ஆண்டுக்கு முன்பும் பின்பும்   நடைபெற்ற பாராளுமன்ற  தேர்தல்களில்   முஸ்லிம்களின் பாராளுமன்ற பிரதிநித்துவத்தினை வரலாற்று ரீதியாக பின்னோக்கிப் பார்ப்பதன் மூலம் அவர்களின்பிரதிநிதித்துவத்தினை நோக்க முடியும்.

1947 தொடக்கம் 1977 வரை தொகுதி முறை தேர்தல் நடைபெற்ற காலங்களில் முஸ்லிம்களை பெரும்பான்மயாகக் கொண்ட தொகுதிகளில்  மிக குறைந்த   உறுப்பினர்களே தெரிவு செய்யப்டிருக்கின்றனர்,  சில போது முஸ்லிம் பிரதி நிதித்துவம்  தெரிவு செய்யப்படுவதற்குப் பதிலாகசகோதர இனத்தவர்கள் தெரிவு செயப்படிருக்கின்றனர். ஒவ்வொரு பாராளுமன்ற  காலங்களிலும் 5தொடக்கம் 10 வரையான உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் முஸ்லிம்களின் பெயரில் அரசியல் புரிந்துஇருக்கின்றனர்.

கொழும்புமத்தி ,பொரல்ல அக்குறணை, பேருவளை ,பலாங்கொடகடுகண்ணாவ,கலகெதெர,  புத்தளம் போன்ற தொகுதிகளில் இருந்து கிழக்கு மகாணத்த்திற்கு வெளியிலும்   கிழக்கில் சம்மாந்துறை,பொத்துவில்,நிந்தவூர்கல்முனைமட்டக்களப்புகல்குடா , மூதூர் ஆகிய தொகுதிகளிலும் முஸ்லிம் பிரதி நிதித்துவம் தெரிவு செயப்பட்டிருக்கின்றது.
1947 தொடக்கம் தொடர்ச்சியாக  முஸ்லிம் பிரதி நிதிகளை பாராளுமன்றம் அனுப்பிய   பெருமை  கிழக்கின் அம்பாரை மாவட்டத்திற்கே சேரும்

சொற்ப தொகையினராக அக்கால முஸ்லிம் பிரதிநிதிகள் இருந்த பொழுதிலும் முஸ்லிம் சமுகத்தின் கல்வி கலாசார மேம்பாட்டிற்கு உழைத்தது போல் தேசிய அரசியலில் காத்‌திரமான பங்களிப்புகளை செய்திருக்கின்றனர். 
மாவட்டவாரியான தேர்தல் நடைபெற்ற காலங்களில் அதிகமான முஸ்லிம் பிரதிநிதிகள் தெரிவு செயப்பட்டிருப்பதுடன் குறிப்பிட்ட உறுப்பினர்கள்
அமைச்சர்களாக  தன்னை அலங்கரித்து  பணி புரிந்துகொண்டிருப்பதையும் 
ஒவ்வொரு பாராளுமன்ற காலங்களிலும் கிட்ட தட்ட 15 தொடக்கம் 22 வரையான முஸ்லிம் பிரதிநிதிகள்  தன் சமுகத்தினை பிரதிநிதித்துவப் படுதித்தியுள்ளதை அவதானிக்கலாம்.
இக்கால பாராளுமன்ற முஸ்லிம் பிரதிநிதிகள் வித்தியாசமான சூழலில் பிரதிநிதித்துவத்தினை பெற்றிப்பதையும் அவர்களின் பணி சமுகம் தொடர்பாக எவ்வாறான நிலைமையில் உள்ளது என்பது பற்றி ஒப்பீட்டு பேசவேண்டியுள்ளது.

இரு வேறு விதமான தெரிவு முறைகளிலும் முஸ்லிம் சமுகத்திற்கான நன்மைதீமை என்பது பற்றி சிந்திக்க வேண்டி உள்ளது.

 தொகுதி முறையில் தமது பிரதேசத்துக்கான உறுப்பினர் என்ற தன்மையினை உரிய  தொகுதி மக்கள் பெற்றுக் கொள்வர். தமது தொகுதியினை அபிவிருத்தி செயக்கூடியவராக அவர் இருப்பதுடன் முடியுமான அளவு சமுகம் சார்ந்தும் சிந்தித்து செயற்ப்படுவதை விட்டும் அவர் தவறுவதில்லை.

மாவாட்ட முறை முஸ்லிம் சமுகத்தினை பொறுத்தளவில் அதுவே வரவேற்க்கப்படக் கூடியது.மாவட்டத்தில் உள்ள சகல மக்களையும் ஒன்றிணைத்தவாறு ஒற்றுமையுடன் பிரதேச வாதத்திற்கு அப்பால் செயற்ப் படக்கூடிய தன்மையும் தேசிய ரீதியாக சமுகத்தினை ஒன்றிணைக்கூடிய நிலைமையினையும் காணலாம்..


அன்றைய முஸ்லிம் தலைவர்கள்  முஸ்லிம் இனத்துவ கட்சி முறை பற்றி சிந்தித்து சில நடவடிக்கைகளை  எடுத்திருந்தனர் இருப்பினும் அவை கைகூடவே இல்லை.மாவட்ட முறையிலேயே அது சாத்தியப் படுத்தப் பட்டதுடன் முஸ்லிம் சமுகம் அரசியல் புற்றுணர்ச்சி பெற்றதையும் சுட்டிக் காட்டலாம்.

தொகுதி முறையான தெரிவுகளில் இருந்ததை போல்  உரிய தொகுதியில் உறுப்பினர் தெரிவு செய்யப்படாத நிலை  இருந்தாலும் தேசிய பட்டியல் மூலம் உறுப்புரிமை பெறும் நிலை இத்தேர்வில் இருப்பது ஆறுதலே.

முஸ்லிம் சமூகத்தின் அரசியல் இருப்பை கவனத்திற்க் கொண்டு தற்போது உள்ள தலைவர்கள் காத்‌திரமான பங்களிப்புக்களை வழங்குவது மிக முக்கியமானது.

சகல திருத்தங்களும் முடி வடைந்த பிறகு அது பற்றி பேசுவதை விட உரிய  நடவடிக்கை எடுக்கவேண்டிய தருணத்தில் எம் முகத்தின் தலைவர்கள்  இருக்க வேண்டும் 

பெரும் பகையாளிகளாக இருந்த ஐ .தே. க வும் சு . க வும் ஒன்று சேர்ந்து தேசிய அரசை அமைத்துள்ள நிலையில் எம் சமுகத்தின் தலைவர்கள் ஒன்றிணைந்து உரிய நடவடிக்கை எடுப்பது காலத்தின் தேவையாகும் 


Post a Comment

0 Comments