Ticker

6/recent/ticker-posts

கென்யாவில் தீவிரவாதிகளை ஒழிக்க ராணுவம் வான்வழித் தாக்குதல்

கென்யா பல்கலைக்கழகத்தில் 148 பேரை கொன்றுகுவித்த அல்-ஷபாப் தீவிரவாதிகளை குறிவைத்து கென்யா ராணுவம் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. கென்யா நாட்டின் காரிஸா நகர பல்கலைக்கழகத்திலுள்ள மாணவர் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த அல்-ஷபாப் தீவிரவாதிகள், மாணவர்கள் உள்பட 148 பேரை கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்றனர். 

சோமாலியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக தாக்குதல் நிகழ்த்தி வரும் ஆப்பிரிக்க யூனியன் கூட்டுப் படையில் கென்யா இடம் பெற்றிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்தத் தாக்குதலை நடத்தியதாக அல்-ஷபாப் அமைப்பு கூறியது.  இந்த நிலையில், இந்தத் தாக்குதலில் தொடர்புடைய நான்குபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  


மாணவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலை அடுத்து, சோமாலியாவில் பதுங்கியிருக்கும் அல்-ஷபாப் தீவிரவாதிகள் மீது கென்யா ராணுவம் வான்வழித் தாக்குதல்களை அரங்கேற்றியுள்ளது. கென்யாவில் பதுங்கியுள்ள அல்-ஷபாப் தீவிரவாதிகள் ஒழிக்கும் நடவடிக்கையிலும்  ராணுவம் தீவிரம் காட்டி வருகிறது. 

Post a Comment

0 Comments