Ticker

6/recent/ticker-posts

கோடை வெயில் உச்சம்: இந்தியா தெலங்கானா, ஆந்திராவில் 432 பேர் பலி

ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. 116 டிகிரி வரை வெப்ப நிலை பதிவாகியுள்ளது. 
தெலுங்கானாவில் உள்ள அதிலாபாத், வாராங்கல், ஐதராபாத், ஹாமம், மகாபூப்நகர், நல்கோல்டா மற்றும் நிசாமாபாத், கரிம்நகர் பகுதிகளில் தொடர்ந்து வெயிலின் உக்கிரம் நீடித்து வருகிறது. இது வரை இந்த இரு மாநிலங்களிலும் வெயிலுக்கு 470 பேர் பலியாகியுள்ளனர்.
இதற்கிடையில் மேலும் 4 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதே போல் தில்லியில் வெப்ப நிலை 43.5 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருப்பதாகவும், உத்தரப் பிரதேசத்தில் 47.7 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருப்பதாகவும், ஒடிசாவில் 19 நகரங்களில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருப்பதகாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments