முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று திங்கட்கிழமை குருநாகல் நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட அவர் எதிர்வரும் ஜூன் 8ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு பிணை வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு, விசாரணைக்காக மேல் நீதிமன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சதோச நிறுவனத்தில் பொருட்கள் கொள்வனவு செய்து அதற்கான பணத்தை செலுத்தத் தவறிய குற்றச்சாட்டில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Comments