Ticker

6/recent/ticker-posts

வித்தியாவின் குடும்பத்தினரை சந்தித்த மைத்திரி !

புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட வித்தியாவின் தாய் மற்றும் சகோதரனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். 
யாழ்ப்பாணத்துக்கு நேற்று புதன்கிழமை திடீர் விஜயம் செய்த ஜனாதிபதி, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டவர்களுடனேயே வித்தியாவின் தாய் மற்றும் சகோதரனை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.
இதனிடையே, யாழ் பாடசாலை மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வித்தியாவின் படுகொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் விசேட நீதிமன்ற விசாரணைகளின் மூலம் விரைவில் தண்டிக்கப்படுவார்கள் என்று உறுதியளித்துள்ளார்.

Post a Comment

0 Comments