அரச ஊழியர்களின் பகல் உணவிற்கான இடைவேளை குறைக்கப்பட்டால் பாரியளவில் தொழிற்சங்க போராட்டங்கள் வெடிக்கும் என தேசிய தொழிலாளர் மத்திய நிலையத்தின் தலைவர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களுக்கான பகல் உணவு இடைவேளையை அரை மணித்தியாலமாக மாற்றும் சுற்று நிருபம் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும்.
உழைக்கும் மக்கள் எட்டு மணித்தியால பணிக் காலத்துடன், ஒரு மணித்தியால பகல் உணவு இடைவேளையும் வென்றெடுக்கப்பட்டது.
இவ்வாறு வென்றெடுக்கப்பட்ட பகல் உணவு இடைவெளிக் காலத்தை ஒரு மணித்தியாலத்திலிருந்து அரை மணித்தியாலமாக குறைக்க தற்போதைய அரசாங்கத்திற்கோ அல்லது வேறும் அரசாங்கங்கங்களிற்கோ உரிமை கிடையாது.
மக்கள் ஆணை மற்றும் ஒட்சிசன் இல்லாத இந்த அரசாங்கம் செய்து வரும் விசர் வேலைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
உழைக்கும் மக்களின் உரிமைகளை முடக்குவதற்கு இந்த அரசாங்கத்திற்கு எவ்வித உரிமையும் கிடையாது.
இந்த நிலைமைகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பொறுப்பு சொல்ல வேண்டும்.
அரச ஊழியர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்படுவதனை தடுக்க ஜனாதிபதி மத்தியஸ்தம் வகிக்க வேண்டுமென வசந்த சமரசிங்க கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

0 Comments