Ticker

6/recent/ticker-posts

தாய்ப்பால் புரைக்கேறியதால் பெண் சிசு மரணம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தாய்ப்பால் புரைக்கேறியதால் சிசுவொன்று உயிரிழந்த சம்பவம் சனிக்கிழமை (23) இடம்பெற்றுள்ளதாக, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். வாசிகசாலை வீதி, கொம்மாதுரை, செங்கலடி எனும் பிரதேசத்தைச்  சேர்ந்த உதயகுமார் விதுஷினி (38 நாட்கள்) என்ற பெண் சிசுவே இவ்வாறு உயிரிழந்துள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தாய், சிசுவுக்கு பால் கொடுத்துக்கெண்டிருக்கும் போது திடீர் என்று சிசு மயக்கமடைந்துள்ளது. 


உடனடியாக அருகிலுள்ள செங்கலடி வைத்தியசாலைக்கு சிசுவை கொண்டு சென்றபோது, சிசு உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தாய்ப்பால் குடிக்கும்போது, தாய்ப்பால் புரைக்கேறியதால் சுவாசம் தடைப்பட்டு இதயம் செயலிழந்ததாலேயே மரணம் சம்பவித்துள்ளதாக பிரதேச பரிசோதனையின் போது தெரியவந்துள்ளது. குறித்த குடும்பத்தில் ஏற்கெனவே 8, 4 வயதுகளில் இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்கின்றனர். இந்நிலையில் இந்த பெண் சிசு கடந்த 15.04.2015 அன்று பிறந்துள்ளது. 

இது தொடர்பான விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் - 

tamilmirror.lk

Post a Comment

0 Comments