Ticker

6/recent/ticker-posts

பொலிசாரின் தாக்குதலில் பார்வை இழந்த பள்ளி மாணவன்!

இந்தியா, ஜம்மு காஷ்மீரில் மவுலவி பாரூக்கின் 25-வது நினைவு தினத்தை யொட்டி கடந்த வியாழக்கிழமை  பேரணி நடைபெற்றது. பேரணியில் ஏற்பட்ட கலவரத்தை அடக்க பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10ம் வகுப்பு மாணவன் ஒருவன்  பார்வை இழந்த சம்பவம் நடந்துள்ளது.

ஹமீத் நசீர் என்ற அந்த சிறுவனுக்கு 16 வயது. 10 ம் வகுப்பி படித்து வருகிறார். டியூசன் சென்டர் திறந்து இருக்கிறதா  என்று பார்க்க சென்ற சிறுவன்  பொலீசாரின் தக்குதலுக்கு ஆளாகி உள்ளார். 
கலவரத்தை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் பிரத்யேக துப்பாக்கியைக் (பெல்லட் துப்பாக்கியை) கொண்டு பொலீஸார் ஹமீது நசீரை சுட்டுள்ளனர். அந்த துப்பாக்கியில் இருந்து சிதறிய நூற்றுக்கணக்கான சிறு இரும்பு குண்டுகள் நஸீரின் முகத்தில் பல்வேறு இடங்களிலும் பாய்ந்துள்ளது.

இது குறித்து ஷேர்-இ-கான் மருத்துவமனை மருத்துவர் வஷீம் ரஷீது கூறும்போது, "முகம் முழுவதும் இரும்புக் குண்டுகள் பாய்ந்த நிலையில் அந்த இளைஞர் எங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சனிக்கிழமை கண்ணில் அறுவை சிகிச்சை மேற்கொண்டோம். ஆனால் அவர் அப்போதே பார்வை இழந்திருந்தார்.
அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது மண்டை ஓடு, உதடுகள், மூக்கு, மூளை என பல்வேறு பகுதிகளிலும் இரும்புக் குண்டுகள் பாய்ந்துள்ளன. அவரது நிலைமை மோசமாகவே இருக்கிறது" என்றார்.

இதற்கிடையில், சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட இளைஞரின் பெற்றோர் கூறும்போது "எங்கள் மகன் டியூசன் சென்றிருந்தான். அவனுக்கு பார்வை திரும்புமா என்பதே எங்கள் எதிர்பார்ப்பு" என்றனர்.

Post a Comment

0 Comments