முன்னாள் ஜனாதிபதியின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷ எதிர்வரும் முதலாம் திகதி காவல்துறை நிதிமோசடி விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
'சிரிலிய சவிய' வேலைத்திட்டம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் பொருட்டே இவ்வாறு அவர் அழைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.இது தொடர்பான கடிதம் நேற்று கிடைக்கப்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.
'சிரிலிய சவிய' வேலைத்திட்டத்தின் ஊடாக நாடு முழுவதும் மருத்துவ சேவைகள் மேற்கொள்ளப்பட்டன.
இது தொடர்பிலேயே அழைக்கப்பபட்டுள்ளதாகவும், இது குறித்து சட்டத்தரணிகளின் ஆலோசனைகளை பெற்று விசாரணைக்கு முகங்கொடுக்க உள்ளதாகவும் அவர் நாமல் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் இது தனது தந்தையை பழிவாங்கும் நோக்கில் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Comments