இந்தியா, ஹரியானாவில் பல்லாப்கர் பகுதியில் உள்ள அடலி என்ற கிராமத்தில் புதிதாக கட்டப் பட்டு வந்த மஸ்ஜித் ஆர் எஸ் எஸ் காரர்களால் தாக்கப் பட்டது. 500 க்கும் அதிகமான காவலர்கள் அந்த கிராமத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போதும் பெரும்பாலான முஸ்லிம்களின் வீடுகள் தீக்கிரையாக்கப் பட்டன, முஸ்லிம்களின் சொத்துகளும் ஒன்று விடாமல் சூறையாடப் பட்டன. கலவரத்தில் பாதிக்கப் பட்ட 150 க்கும் அதிகமான கிராமத்தினரை காவல்துறையினர் மறுவாழ்வு மைய்யத்திற்கு கொண்டு வந்தனர். கலவரத்தில் 18க்கும் அதிகாமானோர் படு காயங்களுக்குள்ளாகியுள்ளனர். இரண்டு பேர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றனர். அந்த கிராமத்தில் முஸ்லிம்களின் வீடுகளும் சொத்துகளும் தீவைக்கப் பட்டும் கொள்ளை அடிக்கப் பட்டும் முற்றிலுமாக அழிக்கப் பட்டுள்ளது.
முஸ்லிம்களுக்கு சொந்தமான இடத்தில் நீதிமன்ற அனுமதியுடன் கட்டப்பட்டு வரும் பள்ளிவாசல் கட்டுமானத்தை நிறுத்தக்கோரி இந்துத்துவாவினர் ஜனவரி மாதம் முதலே பதற்றத்தை உண்டாக்கி வந்திருக்கின்றனர், அந்த இடத்தில் உள்ள 17 கடைகளில் முஸ்லிம்களுக்கு சொந்தமான ஒரே ஒரு கடை மட்டும் முற்றிலுமாக தாக்கப்பட்டுள்ளது. அது போலவே முஸ்லிம்களுடைய வீடுகள் மட்டும் குறிவைத்து செங்கள் மற்றும் சிலிண்டர்கள் வீசி தாக்கப்பட்டுள்ளது.
கிராமத்தினர் கலவரத்திலிருந்து உயிர் காக்க அவசர அவசரமாக வெளியேறியதற்கான காட்சிகள் எல்லா இடங்களிலும் காணப்படுகிறது. எந்த ஒரு முஸ்லிம் வீடும் பூட்டப் படவில்லை, கலவரத்திற்கு பின்னும் இன்னும் சில வீடுகளில் மின் விசிறிகள் ஓடிகொண்டிருக்கின்றன.
அடலி கலவரத்தில் பாதிக்கப் பட்டோர் ஒரு பேருந்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளனர்.
கலவரம் மேலும் ஏற்படாமல் தடுக்க இருக்க ஹரியானா கமாண்டோ படையினர் உட்பட்ட அதிகமான காவல் படையினர் கிராமத்தில் முகாமிட்டுள்ளதாக ஒரு காவல்துறை அதிகாரி கூறினார்.
கலவரம் தொடர்பான குற்றங்களை பதிவு செய்தல் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. பெறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தீவைத்து எரிக்கப் பட்ட வீடுகளையும் அதன் உரிமையாளர்களையும் அடையாளம் கண்டு கொண்டிருக்கிறோம், மேலும் கலவரத்தினால் ஏற்பட்ட இழப்புகளையும் கணக்கீடு செய்து கொண்டிருக்கிறோம் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த பெரும்பாலோனோர் மருத்துவமனையில் இருந்து திரும்பி விட்டனர். இரண்டு பேர் அதிகமான தீக் காயங்களுடன் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல் துறையினர் கூறினர்.
கலவரம் தொடர்பான பிரிவுகளில் FIR பதிவு செய்யப் பட்டுள்ளது. குற்ற விவகார விசாரணைகளை நாங்கள் துவங்கி உள்ளோம். மேலும் கலவரம் ஏற்படுவதை தடுக்க கூடுதல் காவல் படையினர் கிராமத்தில் பாதுகாப்பு பணியில் ஈடு படுத்தப் பட்டுள்ளனர். இது வரை யாரும் கைது செய்யப்படவில்லை. விரைவில் கலவரக்காரர்கள் கைது செய்யப் படுவார்கள். என பாரிதபாத் DCP புபிந்தர் சிங்க் கூறியுள்ளார்.
காவல்நிலையதிற்க்கு வெளியே போராட்டம்.
கலவரத்தினால் கிராமத்தில் இருந்து வெளியேறிய பெரும்பாலோனோர் பல்லாராஹ் காவல் நிலையத்தை நோக்கி சென்றனர். சிறு காயங்களுக்கு பின் மருத்துவமனையில் இருந்து வெளியேறியவர்களும் காவல் நிலையத்தை நோக்கி சென்றனர். செவ்வாய் கிழமை நடுப்பகல் நேர அளவில் நூற்றுக்கும் அதிகமான நபர்கள் கொண்ட கூட்டம் காவல் நிலையத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடு பட்டனர். கலவரம் தொடர்பான விசாரணைகளை காவல்துறை சரியாக மேற்கொள்ளவில்லை எனவும், காவல் துறை அலட்சியமாக செயல் படுவதாகவும் குற்றம் சாட்டினர்.
கலவரம் முடிந்து 36 மணி நேரம் ஆன பின்பும் இதுவரை காவல் துறை ஒருவரை கூட கைது செய்ய வில்லை, எங்கள் வீடுகளை எரித்து எங்களை வீடில்லாதர்வகளாக ஆக்கிய கலவரக்காரர்களுக்கு ஆதாரங்களை அழிக்கவும் குற்றவாளிகள் ஓடி ஒளியவும் காவல் துறை கால அவகாசம் கொடுப்பதாகவும். சஹில் அஹ்மத் என்ற பாதிக்கப்பட்டவர் கூறினார்.
ஜமியத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் மௌலான செய்து முஹமூது மதானி அவ்வமைப்பின் மற்றொரு செயலாளரான மௌலான ஹக்கேமுட்டின் கசிமியை அங்கு அனுப்பி வைத்துள்ளார்.காவல் நிலையத்தில் FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப் பட்டுள்ளது. அவர் காவல் துறை ஆணையர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளை சந்தித்து சட்டம் ஒழுங்கை நிலை நாட்டவும் அமைதியை ஏற்ப்படுதவும் வலியுறுத்தியுள்ளார். முஹமது மதானி ஹரியானா முதவரை தொடர்பு கொண்டு கலவரக்காரகளை கைதுசெய்து நடவடிக்கை எடுக்க கோரியுள்ளார். அவ்வமைப்பு பாதிக்கப் பட்டோருக்கு உணவு உதவிகளை ஏற்பாடு செய்துள்ளது. மதானி காவல்துறை ஆணையர் Mr சுபாஷ் யாதவ் , MP மற்றும் MC ஷர்மா ஆகியோரை சந்தித்துள்ளார். அவர்கள் கலவரக் கார்கள் விரைவில் கைது செய்யப் படுவார்கள் என உறுதி அளித்துள்ளனர்.
Thoothu Online

0 Comments