15 வயதில் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் பாகிஸ்தானில் நேற்று தூக்கிலிடப்பட்டார். தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு கராச்சி மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.பாகிஸ்தானில் 3 பேரைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கடந்த 1992 ஆம் ஆண்டு அஃப்தாப் பஹதூர் என்பவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை விதிக்கப்பட்டபோது அஃப்தாப் பஹதூரின் வயது 15. பஹதூரை விசாரித்த காவல் அலுவலர்கள் கொடுமைப்படுத்தியதாலேயே கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டதாக சர்வதேச அமைப்புக்கள் புகார்கள் தெரிவித்தன.
இந்நிலையில் நேற்று அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. பஹதூருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதை கராச்சி மக்கள் வரவேற்றுள்ளனர்.
தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பதால் குற்றவாளிகளின் எண்ணிக்கை குறையும் என்றும், அதனால் பொதுமக்கள் தைரியமாக வெளியில் நடமாட முடியும் என்றும் முனிர் அகமது என்பவர் கூறுகிறார்.
இருப்பினும், தான் ஒரு அப்பாவி என்றும், தனக்கு நிறைவேற்றப்படும் தண்டனை சமூகத்தில் எந்த வித மாற்றத்தையும் கொண்டு வராது என்றும் சிறையில் இருந்த போது பஹதூர் எழுதிய புத்தகத்தில் எழுதியுள்ளார்.
பாகிஸ்தானில் தவறு செய்பவர்கள் சிறுவர்கள் என்றாலும் அவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்படுவது வழக்கமான ஒன்று தான் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments