Ticker

6/recent/ticker-posts

இடிந்து விழும் அபாயத்தில் வனாத்தமுல்ல தொடா்மாடி! ஆபத்தில் அல்லல்படுகின்றாா்கள் பொதுமக்கள் ! - முஜீபுா் றஹ்மான்

சீரான முறையில் வனாத்தமுல்ல நெத்சர உயன வீடமைப்பு திட்ட அமைக்கப்டாமையினால் தொடர்மாடி இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதாகவும் இதனால் அனர்த்தங்கள் ஏற்படுமாயின்  பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர் என்று மத்திய கொழும்பு ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான அமைப்பாளரும் மேல்மாகாண சபை உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மான் தொிவித்துள்ளாா். மாளிகாவத்தையில் உள்ள ஐக்கிய தேசிய கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவா் மேற்கண்டவாறு கூறினாா்.

இந்த வீடமைப்பு திட்ட நிர்மானப்பணிகளின்போது  இடம்பெற்ற மோசடி காரணமாகவே இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் முன்னாள் நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவரும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோதபாய ராஜபக்ஷவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவா் கூறினாா். அத்துடன் இவ்விடயம் தொடர்பில் நகர அபிவிருத்தி அமைச்சர் ரவூப் ஹக்கீம் உடனடியாக தலையிட்டு மக்களுக்கு தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும் என்றும், அத்துடன் குறித்த ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன்நிறுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும் என்றும் கூறினாா்.

வனாத்தமுல்லவில் அமைக்கப்பட்ட தொடர்மாடி கட்டடத்தில் குடியமர்த்தப்பட்டவர்கள் மாளிகாவத்தை மற்றும் கிராண்பாஸ் பகுதிகளில் வசித்த மக்களேயாவர். கொழும்பை அழகாக்குவதாக கூறி முன்னாள் பாதுகாப்பு அமைச்சரின் செயலாளரும் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவருமான கோதபாய ராஜபக்ஷ இந்த மக்களை  அச்சுறுத்தி வெளியேற்றினார். வெ ளியேற விருப்பம் தெரிவிக்காதவர்கள் படையினரை கொண்டு ஆயதமுனையில் அச்சுறுத்தப்பட்டதோடு வெள்ளை வேனிலும் கடத்தப்பட்டனர். 

இவ்வாறு மோசமான முறையிலேயே கொழும்பு நகரிலுள்ள மக்கள் வெ ளியேற்றப்பட்டனர். அத்துடன் கோழிக்கூட்டுக்கு ஒப்பான வனாத்தமுல்ல பகுதியில் அமைக்கப்பட்ட நெத்சர உயன வீடமைப்பு திட்டத்தில் உள்வாங்கப்பட்டனர். குறித்த தொடர்மாடியில் 200 தொடக்கம் 300 வீடுகள் அமைக்கப்பட்டன. ஒவ்வொருவீடும் 350 ற்கும் குறைந்த சதுர அடியை கொண்டதாகும். ஒவ்வொரு வீட்டை கட்டுவதற்கும் 70 இலட்சம் செலவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

இது உண்மைக்கும் புறம்பானதாகும். ஏனெனில் குறித்த 11 மாடிகளை கொண்ட இத்தொடர்மாடி தொகுதியில் வீடுகள் மிகவும் குறைந்த செலவில் நிர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த தொடர்மாடி வீடமைப்பு நிர்மானப்பணிகளுக்காக கேள்விமனு கோரப்படவில்லை. இதனை முன்னாள் அரசுக்கு நெருக்கமான ஒப்பந்த காரர்களுக்கு வழங்கப்பட்டது. இதனால் இங்கு ஊழல் மோசடிகள் இடம்பெற்றிருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இதனாலேயே ஒருவருடகாலம் நிறைவடைவதற்குள் இவ்வாறு 9 ஆம், 10 ஆம் மற்றும் 11 ஆம் மாடிகளிலுள்ள வீடுகளில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. 

அத்துடன் மாடிகளுக்கு ஏறும் 'லிப்ட்' மூன்று அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று மாத்திரமே பயன்படுத்தக்கூடியதாக உள்ளது. ஏனைய இரண்டும் செயலிழந்துள்ளன. இதனால் இத்தொடர்மாடியிலுள்ள மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனா்.

சிறந்த குப்பை அகற்றும் முறைகளும் ஏற்படுத்தப்படவில்லை. கொழும்பு மாநகர சபையுடன் இணைந்து இதற்கான செயன்முறையொன்று நடைமுறைப்படுத்தியிருக்கவேண்டும். அதுமட்டுமன்றி கழிவுநீர் வடிகால் அமைப்புக்களும் முறையாக அமைக்கப்பட்டில்லை. இதனால் சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த மக்கள் தமது சொந்த இடங்களிலிருந்து வேறு இடங்களுக்கு அச்சுறுத்தலுக்கு மத்தியில் வெ ளியேற்றப்பட்டமையினால் மத,கலாச்சார ாீதியலான பிரச்சினைகளுக்கும்  இம்மக்கள் முகம் கொடுத்தள்ளனா்.

Post a Comment

0 Comments