கொழும்பில் அநாவசிய காணி கையகப்படுத்தல் மற்றும் பலாத்கார இடப்பெயர்வு என்பவற்றை உடனடியாக நிறுத்துமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணித்துள்ளார்.
நகர அபிவிருத்தி அதிகார சபை தலைவருக்கு பிரதமர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
குறித்த நடவடிக்கைகள் தொடர்பில், மனிதநேய அடிப்படையில் சிவில் சமூகத்துடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட வேண்டும் என்று பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்க காலத்தின் போது புதிய நகர அபிவிருத்திக்காக கொழும்பில் இருந்து பொதுமக்கள் பலாத்காரமாக வெளியேற்றப்பட்டதுடன் அவர்கள் இன்று பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் மக்களின் தேவைகள் வெளிப்படையானதும் பொறுப்புக் கூறும் வகையிலும் நிறைவு செய்யப்பட வேண்டும் என பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments