இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் டெஸ்ட் வீரர் ஹேமந்த் கனித்கர் Hemant Kanitkar புனேயில் உள்ள தனது வீட்டில் உயிரிழந்தார். 72 வயதான அவர் நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார்.
ஹேமந்த் கனித்கர் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடி இருக்கிறார். 1963 முதல் 1978-ம் ஆண்டு வரை மராட்டிய அணிக்காக முதல் தர போட்டியில் விளையாடினார்.
அத்துடன் இந்திய ஜூனியர் அணியின் தேர்வு குழு உறுப்பினராகவும் பணியாற்றி உள்ளார். உயிரிழந்த ஹேமந்த் கனித்கருக்கு, மனைவியும், ரிஷிகேஷ், ஆதித்யா என்ற 2 மகன்களும் உள்ளனர்.
இதில் ரிஷிகேஷ் இந்திய அணிக்காக விளையாடியவர். ஹேமந்த் கனித்கர் மறைவுக்கு இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் டால்மியா, செயலாளர் அனுராக் தாகூர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

0 Comments