முந்தல் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர் பட்டாணி ராசிக் கடத்திக் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தேடப்பட்டு வந்த மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய போது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அரசசார்பற்ற நிறுவனமொன்றின் முக்கிய செயற்பாட்டாளராகவிருந்த பட்டாணி ராசிக் கடந்த 2010ஆம் ஆண்டு பெப்ரவரி 11ஆம் திகதி பொலன்னறுவையில் கடத்தப்பட்டிருந்தார்.
தமது அரசசார்பற்ற நிறுவனத்தின் பணி நிமித்தம் முந்தலிலிருந்து பொலன்னறுவைக்கு சென்ற போது, அடையாளந்தெரியாத குழுவொன்றினால் அவர் கடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர் காணாமற்போய், சில தினங்களுக்கு பின்னர் இரண்டு கோடி ரூபா கப்பம் கோரப்பட்டிருந்தது.
கப்பம் செலுத்தப்படாத நிலையில், கொலை செய்யப்பட்ட பட்டாணி ராசிக்கின் சடலம் மட்டக்களப்பு – காவத்தமுனை பகுதியிலுள்ள வீடொன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையில், 2011ஆம் ஆண்டு ஜூலை 28ஆம் திகதி மீட்கப்பட்டது.

0 Comments