Ticker

6/recent/ticker-posts

கிரிமினல்கள் பட்டியலில் மோடியின் படம்

கூகுள் தேடு பொறியில், 'உலகின் மோசமான, 10 கிரிமினல் கள்' பட்டியலில், பிரதமர் நரேந்திர மோடியின் படம் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை கிளப்பி உள்ளது. அதனால், கூகுள் தேடு பொறியை தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

உலகில் உள்ள பல விஷயங்களைப் பற்றி, உடனே அறிந்து கொள்ள, உலகம் முழுவதும் உள்ளவர்கள் பயன்படுத்தும் வலைதளம் கூகுள் தேடு பொறி. இதில், நேற்று உலகின் மோசமான, 10 கிரிமினல்கள் யார் என, டைப் செய்த போது, மோடியின், மூன்று படங்கள் இடம் பெற்றுள்ளது, சர்ச்சையை எழுப்பி உள்ளது.மோடி படத்துடன், அமெரிக்க படையினரால், கொல்லப்பட்ட அல்-கைதா தீவிரவாதி ஒசாமா பின்லேடன், மும்பை தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் சூத்திரதாாியான தாவூத் இப்ராகிம், போன்றவர்களின் படங்களும் இடம் பெற்றுள்ளன.

Post a Comment

0 Comments