தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த உலகின் முதல் 20 பணக்காரர்கள் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த ஹெச்.சி.எல் நிறுவனர் ஷிவ் நாடார் இடம் பெற்றுள்ளார்.
போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் முதலிடத்தில் உள்ளார்.
போர்ப்ஸ் வெளியிட்டுள்ள தகவல் தொழில்நுட்பத் துறையில் 100 பணக்காரர்கள் பட்டியலில் விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அசிம் பிரேம்ஜி 13-வது இடத்தில் உள்ளார்.
அவரைத் தொடர்ந்து ஷிவ் நாடார் 14-வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரமேஷ் வாத்வானி மற்றும் பாரத் தேசாய் ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.
அசிம் பிரேம்ஜியின் மொத்த சொத்து மதிப்பு 1,740 கோடி டாலர்கள். ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர் என்றும் போர்ப்ஸ் குறிப்பிட்டுள்ளது. இவருக்கு அடுத்து இருக்கும் ஹெச்.சி.எல் நிறுவனத்தின் தலைவரான ஷிவ் நாடாரின் சொத்து மதிப்பு 1,440 கோடி டாலராக உள்ளது.

0 Comments