Ticker

6/recent/ticker-posts

பழமையான குா்ஆனை விற்க முயன்றவர்கள் கைது

17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இஸ்லாமிய புனித நூலான குரானை சட்டவிரோதமாக விற்க முயன்ற 10 பேர் மைசூரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
604 பக்கங்களைக் கொண்ட இந்த குரான் தங்க நிற பக்கங்களில் கறுப்பு எழுத்துக்களில் அச்சிடப்பட்டிருக்கிறது. இதன் அட்டைகளில் விலை உயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன.

இந்த நூல் 410 ஆண்டுகளுக்கு முன்பாக உருவாக்கப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்தியாவில் 1556 முதல் 1605 வரை ஆட்சி செய்த அக்பர் மறைந்த சில நாட்களில் இந்தக் குரான் உருவாக்கப்பட்டிருக்கலாம்.
கைதுசெய்யப்பட்டிருக்கும் பத்துப் பேரைக் கொண்ட குழு, இந்தப் புனித நூலுக்கு 5 கோடி ரூபாய் விலை நிர்ணயித்து விற்க முயன்றதாக காவல்துறை தெரிவிக்கிறது.
"இந்த நூலில் இருக்கும் எழுத்துக்கள் மிக அழகாக இருக்கின்றன. இந்தியாவில் நான் பல பழமையான குரான்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால், இதைப் போல வேறொன்றைப் பார்த்ததில்லை" என்கிறார் வராற்றுப் பேராசிரியரான ஷேக் அலி.
"ஆறங்குல நீளமும் 4 அங்குல அகலமும் கொண்ட இந்தப் பக்கங்களில் எழுத்துக்கள் மிக மிகத் தெளிவாக இருப்பது குறிப்பிடத்தக்கது" என்கிறார் அவர். துருக்கியில் உள்ள அருங்காட்சியகங்களில் இருக்கும் பழைய பதிப்புகளில் மட்டுமே இம்மாதிரி ஒரு தெளிவான எழுத்துக்களைப் பார்க்க முடியும் என்கிறார் அவர்.
இந்த புத்தகத்தின் கடைசிப் பக்கத்தில், இந்தப் புத்தகம் இஸ்லாமிய ஆண்டான 1050ல் எழுதப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.
"ஏதோ ஒரு நெட்வொர்க் மூலமாக இந்தப் புனித நூல் இவர்களது கைக்கு வந்து சேர்ந்திருக்கிறது. ஹைதராபாதிலிருந்து இவர்களுக்கு வந்ததாகத் தெரிகிறது. இது குறித்து விசாரித்து வருகிறோம்" என மைசூரின் காவல்துறை கண்காணிப்பாளரான அபினவ் காரே தெரிவித்தார்.

Post a Comment

0 Comments