டோக்கியோ ஆகஸ்ட் 11-உலகமே நாகசாகி அணுகுண்டு வீசப்பட்ட 70-ஆம் ஆண்டு நினைவு தினமான கடந்த 9-ஆம் திகதியை துக்கம் துனமாக அனுசரித்த போது இந்நாளுக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்தற்காக ஜப்பானில் இயங்கும் வால்ட் டிஸ்னி (walt disney) மன்னிப்பு கேட்டுக் கொண்டது.ஜப்பானில் நாகசாகி மீது அமெரிக்க ராணுவம் அணுகுண்டு வீசி தாக்குதல் நடத்திய 70-ஆம் ஆண்டு நினைவு தினத்திற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை துக்கம் அனுசரிக்கப்பட்டது. உலக அளவில் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த தாக்குதலில் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி பகுதிகளில்
சுமார் இரண்டரை லட்சம் பேர் உயிரிழந்தனர். இப்படிப்பட்ட துக்ககரமான நாளில், ஜப்பானின் வால்ட் டிஸ்னியின் டுவிட்டர் பக்கத்தில், சிறப்பற்ற இந்நாளுக்கு வாழ்த்துக்கள் என்று (congratulations on a not special day) டுவீட் வெளியிட்டனர்.
இதற்கு பலதரப்பினரிடம் இருந்து எதிர்ப்பு வந்ததையடுத்து, எங்களது கண்ணோட்டம் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது எனக்கூறி, முன்னர் வெளியிட்ட டுவீட்டுக்கு வால்ட் டிஸ்னி நிறுவனம் தற்போது மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
0 Comments