Ticker

6/recent/ticker-posts

10 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற பௌத்த பிக்கு!

10 வயது சிறுவன் ஒருவனை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற பௌத்த பிக்கு ஒருவரை பொலிஸார் கைதுசெய்தள்ளனர்.
வவுனியா, வாரிக்குட்டியூர், ரங்காத்கம பகுதியில் உள்ள ரங்காத்கம ரஜகம விகாரைக்கு நேற்றைய தினம் சென்ற 10 வயது சிறுவன் ஒருவனை அவ் விகாரை பௌத்த பிக்கு துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளார். குறித்த சிறுவனை தனது உடம்பில் தைலம் பூசுமாறு கூறி துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளார்.
குறித்த சிறுவனின் பெற்றோரால் வவுனியா, செட்டிகுளம் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டது. இதனையடுத்து, குறித்த விகாரையின் விகாராதிபதி நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதுடன் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.
இதேவேளை, பாதிப்படைந்த சிறுவன் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது வவுனியா வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments