Ticker

6/recent/ticker-posts

ரதுபஸ்வல கொலையாளி பிரிகேடியர் தேசப்பரிய குணவர்தனவை கைது செய்! விமான நிலையத்தில் பௌத்த பிக்கு போராட்டம்!


ரத்துபஸவல மக்களுக்கு தண்ணீர் வேண்டி வெலிவேரிய நகரத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகம் செய்த அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் கோத்தாபயவின் அடிவருடியான பிரிகேடியர் தேசப்பரிய குணவர்தன இன்று அதிகாலை கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.


இந்த துப்பாக்கி பிரயோகத்தில் பாடசாலை மாணவர்கள் இருவர் உட்பட மூவர் கொலைசெய்யப்பட்டனர். ஊடகவியலாளர்கள் உட்பட 40 பேர் காயமுற்றனர். இந்த போராட்டத்தின் போது உண்ணாவிரதம் இருந்த தெரிபெஹே சிரிதம்ம ஹிமி இன்று காலை விமான நிலைய புத்தர் சிலை அருகே சத்தியாக் கிரகத்தில் ஈடுபட்டார். அன்று பொதுமக்களை சுட்டுக்கொண்ட பிரிகேடியர் குணவர்தனவை மஹிந்த அரசு துருக்கிக்கான தூதுவராக நியமித்து அனுப்பி வைத்தது.

இன்று காலை குணவர்தன நாடு திரும்பியுள்ளார். அவரை கைது செய்ய வேண்டியே தெரிபெஹே சிரிதம்ம ஹிமி போராட்டத்தை ஆரம்பித்திருக்கிறார்.

Post a Comment

0 Comments