கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் பலஸ்தீன் அல் அக்ஸா மஸ்ஜித் அருகில் இஸ்ரேலிய பொலிஸாருக்கும் பலஸ்தீனிய பொதுமக்களுக்குமிடையில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.
யூதர்களின் புதுவருடம் கடந்த ஞாயிற்றுக் கிழமை பிறந்தது. இதனையொட்டி யூதர்கள் அல் அக்ஸா பகுதிக்குள் வருவதை பலஸ்தீனர்கள் எதிர்த்து வந்தனர்.
பலஸ்தீன மக்களின் எதிர்ப்பை எதிர்கொள்வதற்காக, பலாத்காரமாக அல் அக்ஸாவிற்குள் புகுந்த இஸ்ரேலிய பொலிஸார் பள்ளிவாசலின் உடைமைகளுக்கு சேதம் விளைவித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட முறுகல் நிலை மூன்றாவது நாளாகவும் தொடர்வதாக அரபு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஏற்பட்டது. தொடர்ந்து இடம்பெற்று வரும் போராட்டத்தால் இதுவரை 17 பேர் காயமுற்றுள்ளனர்.






















0 Comments