Ticker

6/recent/ticker-posts

கொழும்பு மக்களின் கல்விக்கு வேட்டு வைக்கும் அரசியல் முதலாளியும் ஆடை முதலாளியும்!

கொழும்பு, மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் மஹா வித்தியாலய அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட ஏழு (7) கோடி ரூபாய்களை பாடசாலைக்கு கிடைக்காமல் தடுக்கும் முயற்சியில் கொழும்பு அரசியல்வாதியொருவர் ஈடுபட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் செய்திகள் அடிபடுகின்றன. 


'அருகில் இருக்கும் சிறந்த பாடசாலை'  திட்டத்தின் கீழ் மேற்படி நிதி கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மானின் முயற்சியால் பாடசாலைக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் அதனை தடுத்து நிறுத்த குறித்த அரசியல்வாதியோடு. சாஹிரா பாடசாலையுடன் தொடர்புடைய பிரபல ஆடை முதலாளியும் பின்னணியில் இருந்து செயற்படுவதாகவும் அறிய வருகிறது.   

கடந்த பல தசாப்தங்களாக ஆளும் தரப்பு அமைச்சர்களாக இருந்து கொழும்பு முஸ்லிம்களின்  கல்வியைப் பற்றி சிந்திக்காமல் தனது வயிற்றையும் குடும்பத்தையும் வளர்த்துக்கொண்ட மேற்படி அரசியல்வாதி பிரதேச பாடசாலைகளுக்கு உருப்படியாக எதுவம் செய்யாமல் தற்போது பாடசாலைக்கு  ஒதுக்கப்பட்ட பணத்தை தடுத்து நிறுத்துவதற்கான சூழ்ச்சியின் பின்னணி புரியாமல் மேற்படி பாடசாலையில் பெற்றோர் பரிதவித்து நிற்கின்றனர்.

கொழும்பு மாணவர்களின் கல்விக்கு எதிராக நடக்கும் சூழ்ச்சிகளை கொஞ்சம பாருங்கள்!

இன்று இலவசமாக கல்விக் கற்கும் உரிமை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகின்றன. அரச பாடசாலைகளில் கூட அனுமதியில்லாமலேயே பெற்றோர்களிடமிருந்து பல ஆயிரம் சுரண்டப்படுகின்றன.

கொழும்பிலுள்ள பாடசாலைகளை பணத்தை கறக்கும் 'பசு மாடுகளாக'  சில அதிபர்களும் பாடசாலை நிர்வாகங்களும் பார்க்கின்றன. பாவிக்கின்றன.

பணமில்லாத ஏழை மாணவர்களுக்கு கல்வி எட்டாக்கனியாக மாறி வருகிறது.   இத்தருணத்தில்  இந்த சூழ்ச்சியின் பின்னணியை தேடி அம்பலப்படுத்துவது மட்டுமல்லாது இத்தகைய சூழ்ச்சிகளை தடுத்து நிறுத்தி இலவசக் கல்வியின் உரிமையை பாதுகாத்து கொடுப்பது கட்டாய கடமையாகும். 

ஒருபுறம் பிள்ளைகளிடமிருந்து பணம் கறக்கப்ட்டு பெற்றோர் துன்புறுத்தப்படும் போது, மறுபுறம் பாடசாலைக்கு அரசினால் ஒதுக்கப்படும் பணம் தடுத்து நிறுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதன் பின்னணி என்ன என்று ஆராய்வது இந்த மண்ணின் மைந்தர்களின் கடமையாகும்.

காலம் சென்ற அமைச்சர் அஷ்ரப் அவர்கள் கொழும்பு முஸ்லிம்களின் கல்வி அபிவிருத்தி தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ள முயற்சித்த போது கூட இந்த அரசியல்வாதி மு.கா தலைவர் அஷ்ரபை கண்டித்து அவரின் திட்டங்களை எதிர்த்து தடுத்து நிறுத்தியது உங்களுக்கு ஞாபகமிருக்கலாம். 

கொழும்பு முஸ்லிம்களின் கல்வியில் கரிசனைக் காட்டாத மேற்படி அரசியல்வாதி அமைச்சர் அஷ;ரப் அவர்களுக்கு ''அம்பாறையில் போய் உங்கள் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யுங்கள் கொழும்பை நான் பார்த்துக் கொள்கின்றேன்'' என்று அன்று அச்சுறுத்தியவர்.

தற்போது கொழும்பு முஸ்லிம்களின் கல்வி மேம்பாட்டை முன்வைத்து இடம்பெறும்  மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் அபிவிருத்தி வேலை திட்டங்களை   தடுத்து நிறுத்த   குறித்த ஆடை தயாரிப்பு நிலைய உரிமையாளரின் உதவியோடு அரங்கேற்றி வருவதாகவும் அறிய வருகிறது. 

குறித்த ஆடை தயாரிப்பு நிறுவன உரிமையாளர் மருதானை, புதுக்கடை, மாளிகாவத்தை பிள்ளைகளை  கொழும்பு சாஹிரா கல்லூரிக்கு சேர்ப்பதை நிராகரித்து வருவதாக ஏற்கனவே குற்றம் சாட்டவும் பட்டுள்ளார். 

கொழும்பு முஸ்லிம்களை கல்வி கற்காத பாரமர்களாக வைத்துக்கொண்டால்தான் தனது அரசியல் வியாபாரத்தை அழகாக செய்யலாம் என்று கங்கனம் கட்டிக்கொண்டிருக்கும் இந்த அரசியல்வாதியோடு கல்வியை ஆடைகளைப் போல கடைச்சரக்காக விற்பனை செய்து வரும் ஆடைக் கடை முதலாளியும் ஒன்றாக சேர்ந்து சூழ்ச்சி செய்து வருவதாகவும் அறிய வருகிறது.  

மேற்படி ஆடை முதலாளி கொழும்பின் ஏழை மாணவர்களுக்கு   சாஹிராவின் கதவை அடைத்து வைத்திருக்கிறார். 

ஏழை, பணக்காரன், முஸ்லிம், தமிழர், சிங்களவர் என்ற  பாகுபாடின்றி   கொழும்பு மக்களின் கல்வியின் ஊற்றாக திகழ்நத சாஹிறா இன்று கொழும்பு முஸ்லிம்களின் கல்விக்கு தடையாக மாறிவிட்டது. 

கொழும்பு மண்ணின் மைந்தர்களுக்கு இன்று சாஹிராவில் கல்வி கற்க முடியாது. அது கொழும்பில் வாழும் உயர் மட்டக்குடிகளின் மற்றும் வெளியூர்களிலிருந்து வந்து கொழும்பில் வசிக்கும் உயர்மட்டக் குடிகளின் பாடசாலையாக மாற்றப்பட்டு விட்டது.

அதுமட்டுமல்லாமல் பணக்காரர்களின் பிள்ளைகள் தனது பாடசாலைகளில் கற்றால்தான் பாடசாலையின் தரத்தைக் காப்பாற்ற முடியும் ஒரு கருத்தையும் ஒருசில பாடசாலை அதிபர்களுக்கும்   இந்த ஆடை முதலாளி    திணித்து வருகிறார். 


அவரின் கருத்துக்கும்   மாதாந்தம் வழங்கும் 25,000 ரூபாய் பணத்திற்கும் அடிமையாக ஒருசில அதிபர்கள்உயர் மட்டக்குடிகளின் பாடசாலையாக தமது பாடசாலைகளையும் மாற்ற முயற்சித்து வருவதாகவும் அறிய வருகிறது. 

இப்படியே போனால் கொழும்பில் ஏழை மக்களின் செல்வதற்கு பாடசாலைகள் இல்லமலாகும் நிலை வெகு விரைவில் ஏற்படப் போகின்றது.

ஏழைகளை மற்றும் மாளிகாவத்தை, புதுக்கடை மக்களை ஸாஹிறாவில் சேர்த்துக்கொள்ளாத இந்த ஆடை வியாபாரி ஒரு ஏழை டெய்லரின் மகனான தன்னை அன்று ஸாஹிராவில் சேர்த்திருக்காவிட்டால் தனது நிலை எவ்வாறிருக்கும் என்பதை உணராமலிருக்கிறார்.

பாடசாலைகளின் தரத்தை  வெறுமனே பணக்காரர்களின் பிள்ளைகளை சோப்பதால் மட்டும் சாதித்து விடலாம் என்று கனவு கண்டுக்கொண்டிருக்கும் இந்த ஆடை முதலாளியின் கனவில் எதிர்கால தலைமுறை யொன்று  எரிந்து சாம்பலாகிக் கொண்டிருக்கிறது.  

பகட்டுக் காரர்களிடமிருந்து பாடசாலைகளை மீட்டு  ஏழைகளுக்கும் உரிய சொத்தாக அதனை மாற்ற வேண்டிய பொறுப்பு எமக்கிருக்கிறது.

Post a Comment

0 Comments