Ticker

6/recent/ticker-posts

விமல் விலகுவதை வரவேற்கிறோம்; இனி இனவாதக் கட்சிகளுடன் கூட்டில்லை: ஐ.ம.சு.கூ

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு எதிர்காலத்தில் இனவாத அரசியலை முன்னெடுக்கும் கட்சிகளுடன் தேர்தல் கூட்டணியை வைத்துக் கொள்ளாது என்று அதன் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து விமல் வீரவங்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி விலகிச் செல்வதை வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலத்தில் சில இனவாத கட்சிகள் எம்முடன் இணைந்ததனால் கட்சியின் கொள்கைகள் பாதிக்கப்பட்டன. எனவே, விமல் வீரவங்ச இப்போது பிரிந்து செல்வது நல்லது என்றும் மஹிந்த அமரவீர கூறியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் கூட்டுச்சேர பல கட்சிகள் விருப்பம் தெரிவித்துள்ளன. எதிர்காலத்தில் இன்னும் அதிக பலத்துடனான கூட்டணியுடன் நாம் தேர்தல்களில் போட்டியிடுவோம் என்ற அவர் மேலும் தெரிவித்துள்ளார். 4tamilmedia.com

Post a Comment

0 Comments