கடத்தப்பட்டு காணாமல்போன மற்றும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிகோரி வவுனியாவில் கவனயீர்ப்புப் போராட்டம்
இலங்கையின் வடக்கு கிழக்கு உட்பட ஏனைய பகுதிகளில் கடத்தப்பட்டு காணாமல்போன மற்றும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிகோரி எதிர்வரும் சனிக்கிழமை (04.03.2017) அன்று காலை 10-12 மணிவரை வவுனியா பிரதான பேரூந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்த வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
இதில் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த ஊடக அமைப்புக்களையும், ஊடகவியலாளர்களையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
ஏற்பாட்டுக்குழு
வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்கள் சங்கம்
தொடர்புகளுக்கு:
0776245508, 0776550632
0772772826, 0775588141, 0773142763.

0 Comments