கூட்டு எதிரணி பாராளுமன்ற உறுப்பினர்கள் பல குற்றச்சாட்டுக்களின் பேரில் சிறையிடப்பட்டுள்ள இராணுவ வீரர்களை நலம் விசாரிக்கச் சென்று இராணுவத்தின் கவனத்தையும் ஆதரவையும் தம் பக்கம் ஈர்த்துக்கொள்ள முற்படுகின்றனர்.
அதேநேரம் ஆர்ப்பாட்டத்தில் விசேட தேவையுடைய இராணுவ வீரர்களை ஈடுபடுத்தி இராணுவத்தின் ஆதரவை திரட்டி அவர்களின் உதவியுடன் சதி செய்து ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொழும்பிலும் வெளியிடங்களிலும் பல ஆர்ப்பாட்டங்களை நாளாந்தம் முன்னெடுக்கப்படு வருகின்றன. நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நாள் தொடக்கம் ஆர்ப்பாட்டங்களுக்கு குறைவில்லை. இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிகளை மறித்து பேராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.
வேறுபட்ட காரணங்கள் பலவற்றை முன்னிலைப்படுத்தி வெவ்வேறு தரப்புக்கள் இந்த ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. குறிப்பாக விசேட தேவையுடைய இரணுவ வீரர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் என பல தரப்புக்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. அதனால் மக்களின் அடிப்படை செயற்பாடுகளில் ஒன்றாக ஆர்ப்பாட்டம் உள்ளீர்க்கப்பட்டுள்ளது.
சிலர் மேற்கொள்ளும் ஆர்ப்பாட்டங்களுக்கான காரணம் என்னவென்றுகூடத் தெரிவதில்லை.
அவ்வாறில்லாமல் உரிமை படிமுறைகளை பின்பற்றிய பின்பு அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்திலேயே ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்க வேண்டும். ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.
இதன் பின்னால் அரசியல் காரணிகள் உள்ளன. அரசியல் குழுக்களின் தூண்டுதலினாலேயே இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இவர்கள் திட்டமிட்டு சில குழுக்களை ஒவ்வொருநாளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தூண்டுகின்றனர்.
நாட்டில் அமைதியை குலைக்கும் நோக்கில்தான் பல்வேறு போராட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன. அத்துடன் புதிய அரசியலமைப்பின் மூலம் நாடு பிளவுபடும் என மக்களிடத்தில் தவறான கருத்துக்களை பரப்புகின்றனர்.
மறுபுறத்தில், பல குற்றச்சாட்டுக்களின் பேரில் கைதாகின்ற இராணுவத்தினரை பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு கூட்டு எதிரணியினர் சிறைகளுக்குச் செல்கின்றனர். பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்களையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்தி இராணுவத்தினரை தம்பக்கமாக ஈர்த்துக்கொண்டு இராணுவத்தின் உதவியுடனான சதியொன்றினை மேற்கொள்ள முயற்சித்து வருகின்றனர்.
இந்த செயற்பாடுகள் கூட்டு எதிர்க்கட்சியினால் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே இடம்பெறுகின்றன.
இதன் பின்னணி காரணம் என்வென்று பார்க்கையில் கூட்டு எதிரணிக்கு ஒருபோதும் மக்கள் ஆதரவு கிடையாது. அதனால் அவர்கள் மாற்று வழிமுறைகளை பின்பற்றி ஆட்சியை கைப்பற்ற முற்படுகின்றனர் என்றார்.
vidivelli.lk
0 Comments