புதுடெல்லி: இஸ்லாம் மதத்தில் பெண்களுக்கு விவாகரத்து அளிக்கும் முத்தலாக் முறைக்கு உச்சநீதிமன்றம் 6 மாதங்கள் இடைக்காலத்தடை விதித்துள்ளது.
மூன்று முறை தலாக் கூறி இஸ்லாமிய பெண்களுக்கு விவகாரத்து வழங்கும் முத்தலாக் முறை செல்லாது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு கூறியுள்ளது.
இவ்விகாரத்தில் மத்திய அரசு 6 மாதத்தில் அவரச சட்ட திருத்தம் கொண்டு வந்து முத்தலாக் பிரச்சனைக்கு தீர்வு காணலாம். அப்படி 6 மாதத்திற்குள் சட்டம் இயற்றவில்லையென்றால் முத்தலாக் மீதான தடை நீடிக்கும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், முத்தலாக் நடைமுறை தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்க வாய்ந்தது என்று பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா, அருண்ஜெட்லி ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இஸ்லாமிய பெண்களுக்கு சம உரிமையும், அதிகாரத்தையும் வழங்கும் வகையில் அமைந்துள்ளது உச்சநீதிமன்றத்தின் முத்தலாக் தீர்ப்பு என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். அதேபோல் உச்சநீதிமன்றம் தீர்ப்பை வரவேற்றுள்ள அமித் ஷா, சுய மரியாதையோடு வாழ வேண்டும் என்ற பெண்களுக்கு புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது என்றார். dinakaran.com

0 Comments