அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸவை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் கபீர் ஹாசிம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கடந்த வியாழக்கிழமை (17) கூடிய போது, அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸவை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குவதற்கு ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ அண்மைக்காலமாக கட்சி மற்றும் அமைச்சரவையின் ஒருங்கிணைந்த பொறுப்பை மீறியுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
0 Comments