Ticker

6/recent/ticker-posts

கல்வி பொது சாதாரனதர பரீட்சையில் அனைத்து பாடங்களிலும் “ஏ” சித்திகளை பெரும் மாணவர்கள் தமிழ்மொழியில் மாத்திரம் குறைந்த சித்தி பெருவதில் உள்ள பிரச்சனைக்கு தீர்வு! கல்வி இராஜாங்க அமைச்சர் இராஜாங்க வே.இராதாகிருஸ்ணன்

தாய் மொழியான தமிழ் மொழிப் பாடத்தில் மாணவர்களின் சித்தியெய்தும் விகிதம் தற்போது வீழ்ச்சி அடைந்து வருகின்றது. கல்வி பொது சாதாரனதர பரீட்சையில் அனைத்து பாடங்களிலும் “ஏ” சித்திகளை பெரும் மாணவர்கள் தமிழ்மொழியில் மாத்திரம் குறைந்த சித்திகளை பெருகின்றனர். தமிழ்மொழியை கற்பதில் மாணவர்கள் பெரும் கஷ்டங்களையும் எதிர்நோக்கி வருகின்றனர்.

அது மட்டுமல்லாது பரிட்சை வினா தாள் திருத்திலும் புள்ளிகள் வழங்களிலும் பாரிய பிரச்சனைகள்.  இந்த பிரச்சனைக்கு உரிய தீர்வினை பெற்றுக் கொள்ளும் நோக்கில் கல்வி இராஜாங்க அமைச்சர் இராஜாங்க வே.இராதாகிருஸ்ணன் தலைமையில் அடைவு மட்ட குறைவு தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று கல்வி அமைச்சில் நடைபெற்றது. 

இந்த கலந்துறையாடலில் அமைச்சரின் செயலாளர் திஸ்ஸ ஹேவவிதாரன¸; பரீட்சை திணைக்கள ஆணையாளர் அநுர புஸ்பகுமார¸ இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளார் இ.திவாகரன்¸  கல்வி அமைச்சின் தமிழ் மொழிப் பிரிவின் உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி ஜி.சடகோபன்¸ கல்வி வெளியீட்டு திணைக்கள ஆணையாளர் திரு. இளங்கசிங்க¸ பிரதி ஆணையாளர் லெணின் மதிவாணன் மற்றும் பரீட்சை திணைக்கள தமிழ் பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி ஜீவராணி மைக்கல்¸ திரு.பிரகாஷ் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

தமிழ் மொழி பாட அடைவு மட்ட குறைவில் 2015 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர தமிழ் மொழிப் பாடத்திற்கு 63101 பேர் தோற்றினர். இதில் 51¸136 பேரே சித்திப் பெற்றனர். அதாவது அடைவு மட்டம் 81.04மூ ஆகக் காணப்பட்டது. 2016 ஆம் ஆண்டு 65¸662 பேர் தோற்றி 51¸612  பேர் சித்தி  பெற்றனர். அதாவது 78.60மூ  சித்தி பெற்றனர். 2.44மூ வீழ்ச்சி 2015 ஐ விட 2016 இல் காணப்பட்டதை மேற்படி  புள்ளிவிபரவியல் எடுத்துக் காட்டுகின்றன. இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டியது கட்டாயமான ஒன்றாக காணப்படுகின்றது.  

இந்த கலந்துரையாடலின் போது இவ்வருடம் தமிழ் மொழிப் பாடத்தில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கான காரணங்கள் கேட்டறியப்பட்டன்.; மாகாணத்தின் சார்பாக ஆசிரிய ஆலோசகர்களால் இது விடயமாக வழங்கப்பட்ட கையெழுத்துப் பிரதிகள் ஆணையாளரிடம் ஒப்படைக்கப்பட்டன. மேலும் இவ்வருடம் நடைபெறவுள்ள க.பொ.த தமிழ் மொழி பாட வினாப்பத்திரங்கள் தொடர்பாகவும்¸ பரீட்சை திருத்துனர்கள் தொடர்பாகவும் கவனம் எடுக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் குறிப்பிட்டார். தொடர்ந்து பரீ;ட்சை வினா தாள் திருத்தம் தொடர்பில் ஆசியிரியர்களுக்கும் நிலைய மேற் பார்வையாளர்களுக்கும் பயிற்சிகளும் கருத்தரங்குகளும் நடாத்தபட உள்ளன. வினா தாள்கள் திருத்தின் போது புள்ளிகள் வழங்குவதில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வுகள் காணப்பட உள்ளன. பாடதிட்டதில் புதிய மாற்றங்களும் தேசிய கல்வி நிறுவனத்தின் புதிய கல்வி கொளள்கைகளும் முன் வைக்கபட உள்ளன.  இந்த செயல் திட்டங்கள் அனைத்தும் எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கபடவுள்ளன. 

Post a Comment

0 Comments