மறைந்த அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் எச.டப்லியூ. புஷ்ஷுக்கு ஜனாதிபதிகளுக்கான சேவைப் பணியில் உள்ள நாய் தனது இறுதி மரியாதையை செலுத்தியுள்ளது.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் உடல்நலக் குறைவால் சனிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 94.
ஜோர்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ்ஷின் மறைவைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதிகளுக்காக சேவைப் பணியில் உள்ள நாய் தனது இறுதி மரியாதை செலுத்திய புகைப்படத்தை முன்னாள் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜிம் மெக்ராத் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ஜோர்ஜ் எச.டப்லியூ. புஷ்ஷின் உடலத்தின் முன் குறித்த நாய் மிகுந்த சோகத்துடன் இருந்தததை குறித்த படம் காட்டகிறது.
அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிக் கொண்டிருக்கிறது.
அமெரிக்காவின் 41-வது அதிபராகப் பதவி வகித்த ஜோர்ஜ் எச் டபிள்யு புஷ் கடந்த 1989-ம் ஆண்டு முதல் 1993-ம் ஆண்டு வரை அந்தப் பதவியில் இருந்தார்.
0 Comments