Ticker

6/recent/ticker-posts

மஹிந்தவின் மூடத்தனமான செயல் - சட்டத்தரணி கோமின் தயாசிரி

கடந்த ஒக்டோபர் 26ம் திகதி ஜனாதிபதி சிறிசேனவுடன் இணைந்து பிரதமர் பதவியை பெற்றுக்கொண்டது மஹிந்த ராஜபக்ஷ செய்த மூடத்தனமான ஒரு செயல் என மஹிந்த சார்பு சட்டத்தரணியான கோமின் தயாசிரி கருத்து வெளியிட்டுள்ளார்.

"மஹிந்த ஒரு முட்டாள்தனமான காரியத்தை செய்தார். அவருக்குயார் அறிவுரை வழங்குகிறார்கள் என்பது தெரியாது? அவருக்கு சட்டத்தரணிகள்தான் ஆலோசனை வழங்குகிறார்களா தெரியாது? நானும் ஒருகாலத்தில் அவருடைய சட்ட ஆலோசகராக இருந்திருக்கிறேன். அப்போது எனது ஆலோசனைகளுக்கு அவர் ஒழுங்காக செவிசாய்த்துள்ளார் என்றும்  கோமின் தயாசிரி கூறியுள்ளார்.

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பிரதமரையும் அமைச்சரவையையும் செயற்படுவதிலிருந்து மேல் நீதிமன்றம் இடைக்கால தடையை பிறப்பித்துள்ளது. நாடு ஸ்திரமற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்த வேளையில் ஜனாதிபதி சரியான முடிவுகளை எடுக்கவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments