Ticker

6/recent/ticker-posts

பிரபாகரனால் செய்ய முடியாததை சுமந்திரன் செய்து வருகிறார்: ரோஹித அபேகுணவர்தன

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் ஆயுதத்தினால் அன்று செய்ய முடியாததை, சுமந்திரன் இன்று, பேனாவல் செய்து கொண்டிருப்பதாக, மஹிந்த தரப்பினர் குற்றம் சுமத்துகின்றனர்.
மஹிந்த தரப்பினரால் கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இதன்போது அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,

“2009 ஆம் ஆண்டு முதல் 2015 ஆண்டு ஜனவரி வரை பயங்கவரவாதம் தலைத்தூக்கியிருந்த வடக்கு கிழக்கில் ஒரு பட்டாசு கூட வெடிக்கவில்லை.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள், யுத்தம் நிறைவடைந்த நிலையில் பட்டாசு வெடிக்கக் கூட அஞ்சினார்கள்.
ஆனாலும் நல்லாட்சியில் 2015 ஆண்டு ஜனவரியில் இருந்து மஹிந்த பிரதமராக நியமிக்கப்படுவரையில் அங்கு என்ன நடந்தது என நீங்கள் நன்கு அறிவீர்கள்.
ஆவா குழு தோற்றம் பெற்றது, வேறு சில குழுக்கள் உருவாகின. அவர்கள் தமிழ் வியாபரிகளைத் தாக்கி, சித்திரவைத செய்து, கொலை செய்து கொள்ளையிட்டனர்.
மாகாணசபை அமைச்சர் ஒருவர், இலங்கை தேசிய கொடியை ஏற்றமுடியாது என்றார். நாம் அப்போது, முதுகெழும்பு இருக்கும் அரசாங்கமாக இருந்தால் அதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரினோம்.
அதன் பின்னர் பெண் அமைச்சர் ஒருவர், மீண்டும் விடுதலைப் புலிகள் தோற்றம் பெறவேண்டும் எனக் கூறினார். இதோ விஜயகலா மகேஸ்வரன் கோரிய விடுதலைப் புலிகள் இப்பொழுது தோற்றம் பெற்றுள்ளனர்.
அன்று பொலிஸார் உறுதியாக இருந்து மாவீர் தினத்தை அனுஸ்டிக்க முடியாது எனத் தடுத்தனர். இதற்காக அவர்களைப் பழிவாங்கும் வகையில் விடுதலைப் புலிகள் அவர்களைக் கொலைச் செய்துள்ளனர்.
இவ்வாறு அன்று துப்பாக்கியாலும், குண்டுகளினாலும் பிரபாகரனினால் செய்ய முடியாததை இன்று, சுமந்திரன் பேனாவினால் செய்கிறார்” என  ரோஹித அபேகுணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments