நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை ஒரு முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் சிறிசேன மற்றுமொரு அதிரடி நடவடிக்கையில் இறங்கியிருப்பதாக அறிய வருகிறது.
சிறிசேனவினால் பாராளுமன்றத்தைக் கலைப்பதற்காக ஏற்கனவே வெளியிடப்பட்ட வர்த்தமானியை மீளப்பெறும் நடவடிக்கையில் அவர் ஈடுபட்டு இருப்பவருவதாகவும் இன்று நள்ளிரவு அதற்காக வர்த்தமானியை வெளியிட இருப்பதாகவும் தகவல் வெளிவந்திருக்கிறது.
பாராளுமன்றத்தைக் கலைப்பது தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானியை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில் சிறிசேன இத்தகைய அதிரடி நடவடிக்கையில் இறங்கியிருப்பதாக அறிய வருகிறது.
எதிர்வரும் 5ம் திகதி கூடவள்ள பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் அணிக்கு பிரதமர் பதவி வழங்கப்படவிருப்பதாகவும் அறியவருகிறது.
நாளுக்கு நாள் தனது அரசியல் முடிவுகளை சிறுபிள்ளைத்தனமாக மாற்றிவரும் சிறிசேனவின் செயற்பாடுகள் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பலத்த விமர்சனங்களை தோற்றுவித்து வருகிறது.
சிறிசேனவினால் உருவாக்கப்பட்ட இந்த அரசியல் நெருக்கடியை அவரே தீர்க்கவேண்டும் என சர்வதேச ரீதியில் அவர் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன.

0 Comments