Ticker

6/recent/ticker-posts

விக்கினேஸ்வரனுக்கு எதிராக துண்டுப்பிரசுரம்!

வவுனியா நகரசபையினால் நடாத்தப்படவிருக்கும்  எழு நீ விருது வழங்கல் நிகழ்விற்கு பிரதம அதிதியாக அழைக்கப்பட்டிருக்கும்  முன்னாள் வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு எதிராக  துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அறிய வருகிறது.
சுயபுத்தியின்றி சொல்புத்தி கேட்டு 4/5 பெருபான்மையுடன் அமைத்த மாகாணசபையை நாசமாக்கிய 23ம் புலிகேசியே வருக வருக..
தமிழர் தேசத்தில் அமையவிருந்த பொருளாதார மத்திய நிலையத்தினை சிங்கள தேசத்தில் அமைக்க காணிவழங்கிய வள்ளலே வருக வருக..
பழைய பேரூந்து நிலையத்தினை மூடி அப்பாவி மக்களினதும் நகர வர்த்தகர்களினதும் மடியில் கைவைத்த பெருந்தகையே வருக வருக என்று விழிக்கும் வசனங்களுடன் இந்த துண்டுப் பிரசுரம் அமைந்தள்ளது.
பாதிக்கப்பட்ட வன்னி மக்கள் என துண்டுப்பிரசுரத்தின் கீழே காணப்படுகின்றது.

Post a Comment

0 Comments