( ஐ. ஏ. காதிர் கான் )
இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவியருக்கான முக்கிய அறிவித்தல் ஒன்றை, குரல்கள் இயக்கம் விடுத்துள்ளது.
அவரவர் தமது கலாச்சார ஆடைகளை அணிவதற்கான உரிமைகளை, இலங்கையின் அரசியல் யாப்பும், பாடசாலை ஒழுக்கக் கோவைகளும் அனுமதிக்கின்றன.
ஒரு மாணவி அணிந்து வரும் கலாச்சார ஆடைகளை, பரீட்சைக் கண்கானிப்பாளர்கள் ஆட்சேபிப்பது, அடிப்படை உரிமை மீறலாகும்.
கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை மண்பங்களில், மாணவிகளின் கலாச்சார ஆடைகள் தொடர்பில் ஏதாவது சம்பவங்கள் நிகழ்ந்தால், அவற்றை உடனே குரல்கள் இயக்கத்திற்குத் தெரிவிக்குமாறு பெற்றோர்களிடமும், மாணவிகளிடமும், நலன் விரும்பிகளிடமும் குரல்கள் இயக்கம் கேட்டுள்ளது.
இவ்வாறு, மாணவியரின் கலாச்சார ஆடை விவகாரத்தில் சட்டத்தை மீறி நடந்து கொள்ளும் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு எதிராக, உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கும், குரல்கள் இயக்கம் தயாராக இருப்பதாக, இயக்க உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலதிக தகவல்களுக்காக, 0094766484119 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என்றும், குரல்கள் இயக்கம் மாணவியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.
0 Comments