Ticker

6/recent/ticker-posts

வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் இருவர் கட்டுநாயக்கவில் கைது

  ( ஐ. ஏ. காதிர் கான் )
 ஒரு தொகை ​வெளிநாட்டு சிகரட்டுக்களை,  ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குக்  கொண்டு வந்த இலங்கையர்கள் இருவர்,  கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

   புத்தளம் பகுதியைச்  சேர்ந்த 46 மற்றும் 48 வயதுடைய இரு வியாபாரிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 


   இவர்கள் இருவரும், நேற்று  (04) அதிகாலை 4.30 மணியளவில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் சார்ஜாவில் இருந்து கல்ப் விமான சேவைக்குச்  சொந்தமான G -  9501 என்ற விமானத்தில் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். 

   இவர்களின் பயணப் பொதியில் இருந்து 242 பெட்டிகளில் அடைக்கப்பட்ட 48,400 சிகரட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், இவற்றின் பெறுமதி சுமார் 2,662,000 ரூபா  என்று, சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். 

   இச்சம்பவம் தொடர்பில், சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments