காலி கோட்டையிலுள்ள நூற்றுக்கணக்கான கட்டிடங்களை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வாங்கி வருவதாக காலி உரிமைகள் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
காலி கோட்டைக்குள் வசித்த 3000 ஆயிரத்திற்கும் அதிகமான சனத்தொகை தற்போது 1500 ஆக குறைந்திருப்பதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டுகிறது.
தற்போது காலி கோட்டைக்கள் ஒரு பேர்ச் காணியின் விலை ஒரு கோடி எழுபது இலட்சங்கள் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அறிய வருகிறது.
அரசாங்க நிர்வாக கட்டங்கள் 37 உட்பட 450 புராதன கட்டிடங்கள் இந்த கோட்டைக்குள் இருக்கின்றன. இதில் நூற்றுக்கும் அதிகமான கட்டிடங்களை வெளிநாட்டினர் வாங்கி சுற்றுலாத் துறை தொடா்பான வர்த்தக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனா்.
காலி கோட்டையில் உள்ள கட்டிடங்கள் ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர் கால கட்டிடங்களாகும்.
0 Comments