Ticker

6/recent/ticker-posts

மஹிந்த வெறுமனே பாராளுமன்ற உறுப்பினரே! பாராளுமன்ற இணைய தளம் தகவல்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும்,முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும்  வெறுமனே பாராளுமன்ற  உறுப்பினர்கள் என பாராளுமன்ற இணையதளம் தொிவிக்கிறது.
பாராளுமன்ற  இணையத்தளத்தில் மஹிந்த மற்றும் ரணில் ஆகிய இருவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த பாராளுமன்ற அமர்வின் போது பாராளுமன்ற இணையத்தளத்தில் பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததை சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது..
அதில் மஹிந்தவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னரும் பாராளுமன்ற இணையத்தளத்தில் பிரதமரின் பெயராக மஹிந்தவின் பெயரே காணப்படுகின்றது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

Post a Comment

0 Comments