Ticker

6/recent/ticker-posts

இராணுவம் கைப்பற்றியிருந்த தமிழ் மக்களின் 500 ஏக்கர் காணிகள் விடுவிப்பு

மன்னார், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் இராணுவம் கைப்பற்றியிருந்த காணிகளில் 500 ஏக்கர் காணிகள்  நேற்று (21) விடுவிக்கப்பட்டுள்ளதாக மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட 600 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட வெள்ளாங்குளம் பண்ணை படையினர் வசம் இருந்தது. 

குறித்த பண்ணையில் 500 ஏக்கர் நிலம் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது என மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் மேலும் தெரிவித்தார். 

Post a Comment

0 Comments