பேஸ்புக் நிறுவனத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பகுதிகளுக்கான பொது கொள்கைக்கான பணிப்பாளர் திருமதி அங்கி தாஸ், விஜேராமவில் உள்ள எதிர்கட்சி தலைவரை இன்று சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பில் சமூக வலைதளங்களில் அனுமதிக்கப்படக்கூடிய சந்தை வாய்ப்பு மற்றும் அதிகரிக்கும் போலி தகவல்களுக்கு எதிரான சைபர் பாதுகாப்பு ஏற்பாடுகள் உட்பட பல்வேறு விடயங்கள தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக அறியவருகிறது.
பேஸ் புக் நிறுவனத்தின் பங்களிப்புடன் இடம்பெற்ற காலி கல்வியியல் திருவிழாவின் 10 ஆண்டு கொண்டாட்டங்களையிட்டு திருமதி தாஸ் மற்றும் அவரது குழுவினர் இலங்கை வந்திருந்ததாக எதிர்க்கட்சித் தலைவரின் முகநூல் பக்கத்தில் தகவல் தொிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments