தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மேல் கொத்மலை நீர்தேகத்தில் இருந்து இன்று (04) காலை ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட சடலம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். குறித்த இறந்த நபர் தவறுதலாக நீரில் மூழ்கி உயிரிழந்தாரா?, தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டு நீர்தேக்கத்தில் வீசப்பட்டாரா போன்ற கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சடலம் இதுவரை யாருடையது என அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
0 Comments