தைத்திருநாளான இன்று மாலை யாழில் வாள்வெட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை பகுதியில் அமைந்துள்ள நாச்சிமார் கோயில் வளாகத்திலேயே இந்த வாள்வெட்டு சம்பவம் பதிவாகியுள்ளது.
கோயிலுக்கு அருகிலிருந்த இளைஞர்கள் மீது, வாள்வெட்டுக்குழு தாக்குதலை மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளது.
பட்டப்பகலில் நடைபெற்ற இவ்வாள்வெட்டு சம்பவத்தில் 2 இளைஞர்கள் படு காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டதுடன் அதில் ஒரு இளைஞருடைய வலது கை கட்டைவிரல் துண்டிக்கப்பட்டுள்ளது.
அங்கிருந்து மீட்கப்பட்ட இருவரும் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களாலேயே இவ் வாள் வெட்டு சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் குறித்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அறிய வருகிறது.

0 Comments