கடந்த வாரம் 'நெத்த வெனுவன் எத்த' என்ற புத்தகம் வெளியீடு தொடா்பாக விமல் வீரவன்சவிற்கு நீதிமன்றம் அபராதம் விதித்தது. ஜேவிபி கட்சிக்கு சொந்தமான ஆவணங்களை வைத்து இந்த நூல் பிரசுரிக்கப்பட்டிருப்பதாக விமல் வீரவன்ச மீது குற்றம் சாட்டப்பட்டது.
ஜேவிபி செயலாளர் ரில்வின் சில்வா தொடர்ந்த வழக்கு பத்து வருடங்களாக விசாரணை செய்யப்பட்டு கடந்த வாரம் தீர்ப்பு வழங்கப்பட்டது.
அபராதத் தொகை பத்து மில்லியன்கள் என்று ஊடகங்களில் செய்தி வெளிவந்த போதிலும் அது ஒரு மில்லியன் ரூபாய் என விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது.
தவறுதலாக ஊடகங்கள் அபராதத் தொகை ஒரு கோடி ரூபாய் என பிரசாரம் செய்ததாகவும் மேற்படி கட்சி அறிவித்திருக்கிறது.

0 Comments