Ticker

6/recent/ticker-posts

நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய பாரிய நீரியல் ஆய்வு மையம் தொடர்பிலான உயர் மட்ட கலந்துரையாடல்

சீன விஞ்ஞான கழகம் மற்றும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சு என்பன இணைந்து செயற்படுத்தும்; புரிந்துணர்வு உடன்படிக்கைக்கமைவாக, பேராதனை பல்கலைக்கழக வளவில் அமைக்கப்பட்டு வரும் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய பாரிய நீரியல் ஆய்வு மையம் தொடர்பிலான உயர் மட்ட கலந்துரையாடல் அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னெயின் தலைமையில் திங்கட்கிழமை (28) அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.


இதன்போது, 2020இல் நிறைவு செய்யப்படவுள்ள செயற்றிட்டத்தின் முன்னேற்ற அறிக்கை மற்றும் எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச நீர்வள மாநாடு என்பன தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

இக்கலந்துரையாடலில் சீன விஞ்ஞான கழகத்தின் பேராசிரியர் யுஆன்சொங் வெய் உள்ளிட்ட பிரதிப் பணிப்பாளர் திருமதி பெங்க்காய் தலைமையிலான குழுவினர் மற்றும் அமைச்சின் மேலதிய செயலாளர் ஏ.சி.எம்.நபீல், கலாநிதி எஸ்.வேரகொட உள்ளிட்ட உயரதிகாரிகளும் பங்குபற்றினர். 

Post a Comment

0 Comments