ஓரு காலத்தில் நீர் வளம் பெரிதும் அருகிப்போகும். அப்பொழுது மக்கள் வீதியில் இறங்கி, தண்ணீருக்காக போராடும் நிலை ஏற்படலாம். ஆகையால், நீரை விரயமாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
நூறு மில்லியன் ரூபாய் செலவில் கடந்த சனிக்கிழமை (26) கண்டி மாவட்டத்தில், யடிநுவர மற்றும் ஹாரிஸ்பத்துவ தேர்தல் தொகுதிகளிலுள்ள ஏழு கிராமங்களுக்கு நீர் வழங்கும் முகமாக நீர் குழாய் கட்டமைப்புகளை விரிவுபடுத்தி மக்களுக்குக் கையளிக்கும் நிகழ்வுகளின் பின்னர் பலன கிராம பௌத்த விகாரையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அமைச்சர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
குடிநீர் போத்தலொன்று சந்தையில் 50 ரூபாய்க்கு அதிகமாக விற்பனை செய்யப்பட்ட போதிலும், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை மூலம் 2000 போத்தல்கள் கொள்ளும் அளவு நீருக்காக வெறும் பன்னிரெண்டு ரூபாய் மட்டுமே அறவிடப்படுகிறது. இதனால் குழாய் மூலம் பெறப்படும் நீரை விரயம் செய்யாது கவனமாய் பயன்படுத்தல் வேண்டும்.
நீர் வழங்கல் திட்டங்களுக்காக ஒரு சதமேனும் அரசாங்கத்தின் வரவு - செலவு திட்டத்தினால் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இருந்தாலும், இத்திட்டத்துக்காக பாரியளவிலான பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. நீர் கட்டணத்தை அதிகரித்ததை காரணம் காட்டி சிங்கள வாரஇதழ் பத்திரிகையொன்று என்னை விமர்சித்திருந்தது. மேலும், சில அமைச்சர்களும் நீர்க்கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.
குடிநீர் விநியோகத்தில் உற்பத்தி செலவில் நான்கில் ஒரு பங்கை மாத்திரமே அரசாங்கம் அறவிடுகின்றது. இவ்வாறான நிலை நீடிக்குமானால் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையை பராமரிப்பது மிகக் கடினமான காரியமாகிவிடும்.
முதலீடு செய்யும் பணம் அதற்கான வட்டி, பராமரிப்பு செலவு மற்றும் உற்பத்திக் கட்டணம் ஆகியவற்றை பார்க்கும்போது, இவ்வருடத்துக்குள் மாத்திரம் 12 பில்லியன்; ரூபாவை நாங்கள் கடனாக செலுத்த வேண்டியுள்ளது. அமைச்சரவை எனது கோரிக்கையை நிராகரித்தாலும், பொது மக்களின் பால் இது நல்ல விடயம் தான். நீர்க்கட்டணத்தை அதிகரிக்காவிட்டாலும், மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கலாம். ஆனால், கடன் செலுத்த வேண்டிய தொகையை திறைசேரியே பொறுப்பேற்க வேண்டிவரும்.
நீர் வளம் என்பது மிகவும் பெறுமதி வாய்ந்ததொன்றாகும். இங்குள்ள மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்று முகமாக ஒவ்வொரு வீடுகளுக்கும் குழாய் மூலம் நீரை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இவ்வாறான பல்வேறு பிரச்;சினைகளுக்கு மத்தியில்தான் இவ்வாறான நீர் வழங்கல் திட்டங்களுக்கு முதலீடுகளை மேற்கொண்டுள்ளோம் என்பதை அனைவரும் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும்.
உலகில் பெற்றோல், எரிவாயு, கனிப்பொருள் வளங்கள் ஒரு காலத்தில் முடிந்து போய்விடும். அவ்வாறே நீர் வளமும் முற்றாக அற்றுப் போகும் ஒரு காலம் வரும். அப்பொழுது மக்கள் தண்ணீருக்காக ஒவ்வொருவரும் சண்டை பிடித்துக் கொள்வார்கள். அதனால் யுத்தம் கூட ஏற்படலாம். ஆகையால், நீரை வீண்விரயம் செய்யாமல் சிக்கனமாக பாவிக்க பழகிக் கொள்ள வேண்டும் என்றார்.

0 Comments