போதைப்பொருள் குற்றச்சாட்டின் பேரில் மரண தண்டனைக்கு உள்ளானோரின் பெயர்கள் அடங்கிய கோவைகள் காணாமல் போயுள்ளதாக ஜனாதிபதி நேற்று முன் தினம் தெரிவித்திருந்த நிலையில் நீதி அமைச்சர் தலதா அத்துகோரள நேற்று மரண தண்டனைக்கு உள்ளாகியுள்ள 18 பேரின் ஆவணங்களை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.
குறித்த கோவைகள் காணாமல் போயுள்ளதாக ஜனாதிபதி முல்லைத்தீவில் வைத்து தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதியின் இந்த கருத்து தொடர்பில் நேற்று அமைச்சரவைக் கூட்டத்தின் போது அமைச்சர் ரிசாத் பதியுதீன், நீதியமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.
இதனையடுத்தே நீதியமைச்சர் இந்த கோவைகளை அமைச்சரவையில் சமர்ப்பித்தார்.

0 Comments