Ticker

6/recent/ticker-posts

“குடு” சித்தீக் வெளியே வந்தார்!

ஹெரோயின் வர்த்­த­கத்தின் மூலம் சுமார் 52 கோடி ரூபாவை உழைத்­த­தாகக் கூறப்­பட்டு, மூன்­றரை வருடங்கள் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்த பிர­பல ஹெரோயின் கடத்­தல்­கா­ர­ரான மொஹமட் சித்தீக் எனப்­படும் "குடு சித்தீக்" பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

10 இலட்சம் ரூபா ரொக்­கப்­பிணை மற்றும் தலா 50 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான இரு சரீரப்பி­ணை­க­ளில் மொஹமட் சித்­தீக்கை விடு­விக்கப்பட்டுள்ளார்.   கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்­சுள தில­க­ரத்ன அவ­ருக்கு மேலதிகமாக  வெளி­நாடு செல்­வதற்கு தடை­யையும் விதித்ததோடு மாதம் இரு­முறை குற்­றப்­பு­ல­னாய்வு திணைக்­க­ளத்தில் ஆஜ­ராகி கையெ­ழுத்­தி­டு­மாறும் கட்டளை பிறப்பித்துள்ளார்.


கடந்த 2014 ஆம் ஆண்டு ஜன­வரி முதல் 2014 மே வரை­யான காலப்­ப­கு­தியில் ஹெரோயின் வர்த்­த­கத்தின் மூலம் சட்­ட­வி­ரோ­த­மான முறையில் சுமார் 52 கோடி ரூபாவை உழைத்த குற்­றச்­சாட்டில் பணச்­ச­லவை சட்­டத்தின் கீழ் அவர் இவ்­வாறு கைது­செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்டார். 

இவ்­வ­ழக்கின் பிர­தி­வாதி தரப்­பான சட்­டமா அதிபர் சார்பில் ஆஜ­ரா­கி­யி­ருந்த சிரேஷ்ட அரச சட்­ட­வாதி ஸ்ரமிந்த விக்­ரம, சந்­தே­க­நபர் போதைப்­பொருள் வர்த்தகம் தொடர்பான சம்பவத்தின் சந்தேகநபர் என சுட்டிக்காட்டினார். இரு தரப்பிலும் முன்வைக்கப்பட்ட வாதங்களை ஆராய்ந்த நீதிபதி இவ்வாறு பிணையை வழங்கி நிபந்தனை விதித்தார்.

Post a Comment

0 Comments