இந்திய முன்னாள் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் ஃபெர்னான்டஸ் இன்று காலமானார். மரணிக்கும் போது அவருக்கு வயது 88. 1930ம்ஆண்டு ஜூன் 3ம் தேதி கர்நாடக மாநிலம் மங்களூருவில் பிறந்த ஜோர்ஜ் ஃபெர்னான்டஸ் தொழிற் சங்கங்களின் முன்னோடியாக இருந்தவர்.
1970-களில் சோஷியலிஸ்ட் அமைப்பின் முக்கிய தலைவராகவும், ஜனதா தள கட்சியின் தவிர்க்க முடியாத, முன்னணி தலைவராகவும் ஜோர்ஜ் ஃபெர்னான்டஸ் உயர்ந்தார். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, பாதுகாப்புத்துறை அமைச்சராக ஜோர்ஜ் ஃபெர்னான்டஸ் பதவி வகித்தார் . 1998 முதல் 2004 வரையிலான காலத்தில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர்களில் ஒருவராக அசைக்க முடியாத சக்தியாக விளங்கினார்.
வி.பி. சிங் அமைச்சரவையில் ரயில்வே அமைச்சராகவும் இருந்துள்ளார் ஜார்ஜ் ஃபெர்னான்டஸ். அதை தவிர தவிர்த்து தகவல் தொழில்நுட்பம், தொழில்துறை அமைச்சராகவும் ஜோர்ஜ் பொறுப்பு வகித்திருக்கிறார். இவர் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த போதுதான் கார்கில் போர் நடந்தது. இலங்கையின் தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு மிகவும் ஆதரவாக செயற்பட்டவர் இந்த ஜோர்ஜ் பெர்னாண்டஸ்.

0 Comments