( ஐ. ஏ. காதிர் கான் )
மினுவாங்கொடை - கல்லொழுவை, அல் - அமான் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 2019 ஆம் ஆண்டிற்கான இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள், அதிபர் எம். ரீ. எம். ஆஸிம் தலைமையில், கல்லொழுவை அழுத்மாவத்தை வீதி முனாஸ் ஹாஜியார் விளையாட்டு மைதானத்தில், (06) புதன்கிழமை பிற்பகல் ஒரு மணி முதல் நடைபெறவுள்ளன.
ஸ்தான்புல் (பச்சை), குருதுபா (நீலம்), பக்தாத் (சிவப்பு) ஆகிய இல்லங்களுக்கு இடையில் இடம்பெறவுள்ள இவ் இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகளில், மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலி பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
மினுவாங்கொடை வலயக் கல்விப் பணிமனைப் பணிப்பாளர், அதிகாரிகள் உள்ளிட்ட பிரமுகர்கள் பலர் கலந்துகொள்ளும் இந்நிகழ்வுகளின் இறுதியில், மாணவ மாணவிகளின் அணி நடை மற்றும் விநோத உடைப் போட்டி என்பனவும் சிறப்பம்சமாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த 31 ஆம் திகதி நடைபெறவிருந்த இவ்விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள், தவிர்க்க முடியாத காரணங்களினால் 6 ஆம் திகதிக்கு பின் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Comments